Sunday, November 22, 2009

அன்புள்ள காதலிக்கு, உன் உயிர் காதலன் எழுதிக் கொள்(ல்)வது...

என் உளந்தீண்டிய எழிலோவியத்திற்கு,
உன் கண்னசைவினால்
கல்லினின்று உயிரான காதலன் எழுதுவது ...

உன் விழி எழுப்பும் வினாக்களுக்கு விடைகளே இல்லையடி என்னிடம் !!
என் உளம் கொடுக்கும் விண்ணப்பத்திற்கு விடை சொல்லடி ஒரு நிமிடம் ..

வழியின்றி தவித்த எனக்கு வானுக்கே பரிசல் போட்டாய்,
வான்மகளே உன் வசம் வீழ்ந்த
ஆண்மகனின் விழைவு கேள் !!
உயிரைத் துறந்த உணர்தல் தேவை இல்லை நம் உறவுக்கு..
தயக்கம் துறந்து தாவி வா என்னிடம் ..
தஞ்சமடைவேன் உன்னிடம் ..

காதல் சொல் காதலியே ! இல்லை என் நோதல் காண்!!
காலமெல்லாம் காத்திருப்பேன் என்று நானும் கதைக்க மாட்டேன்..
காத்திருப்பைக் கூட்டாதே! என்னால் கண்ணயர முடியாதே!!

கடைசி மூச்சு வரை காதலிப்பேன் என்று கற்பனையைக் கூட்ட மாட்டேன்..
உன் காதல் கிடைக்கப்பெறின், கண்ணயர்வே இல்லையடி எனக்கு , பின் கடைசி மூச்சு என்பதேது?!!

இப்படிக்கு ,
உன் விழி அசைவிற்கும் மன இசைவிற்கும் காத்திருக்கும் காதலன்.

1 comment: